Sunday 18 March 2012

டுவிட்டர்கள், பிளாகர்கள் கவனத்திற்கு.

இது நேற்று டுவிட்டரில் சிலரின் விவாதத்திற்கு அளித்த பதில்.


நேற்று நாம் டுவிட்டரில் விவாதித்த சில விடயங்களுக்கு விளக்கம் தர இந்த மின்னஞ்ச்சலை அனுப்புகிறேன். கடந்த மூன்று நாட்களாக அதாவது சானல் 4 வீடியோவுக்கு பின் இந்த டுவிட்டரில் பலர் உணர்ச்சி பொங்க டுவிட்டுவதை காண முடிந்தது. அது கொஞ்சம் சந்தோசமாகவும் இருந்தது. ஆனால் இங்கு டுவிட்டிய பெரும்பான்மையினர் தங்கள் உணர்ச்சியை வெறும் கோபமாகவே வெளிப் படுத்தியிருக்கின்றனர். உதாரணத்திற்கு அதில் பலர் ராஜபக்சே, சோனியா, கருணா போன்றோரை திட்டுவதை மட்டுமே செய்தார்கள்.

இது போன்ற டுவிட்டுகள் இலங்கை போரின் போதும், சானல் 4 காட்சிகள் வெளியிடும் போதும் சில நாட்களுக்கு மட்டும் தொடர்வதை காண முடிகிறது. அதன் பின் இந்த டுவிட்டர் மீண்டும் மொக்கைகளின் களமாக மாறிப் போவதை நாம் அனைவருமே காண்கிறோம். இது போன்ற மனநிலைகள் "அந்நியன்" போன்ற படங்களை பார்த்து விட்டு வெளியில் வந்த பின் சில மணி நேரங்களுக்கு நம் மனதில் இருக்கும் உணர்ச்சியாக தான் வெளிப் படுகிறது. இதை நாம் ஒரு சுய இன்பம் என்று கூட வரையறுக்க முடியும். எனக்கு இந்த நாட்டின் மீதும், இந்த இனத்தின் மீது அக்கறை இருக்கிறது என்ற நிலையிலேயே அது தன்னிரைவடைகிறது.

இந்த டுவிட்டர், பேஸ்புக் போன்றவை நம் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் போல் ஆகி விடுகின்றன. அதாவது ஒரு சில நாட்களுக்கு நம் உணர்ச்சிகளை அதில் கொட்டி விட்டால் என்னால் முடிந்ததை நான் செய்து விட்டேன் என நம்மை அது தன்னிறைவடைய செய்கிறது. மேலும் இங்கு அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தான் பெரும்பாலும் முழங்குகிறது.

ஆனால் அந்த அமெரிக்க தீர்மானம் என்ன சொல்கிறது. அதை ஏன் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் படுகிறது போன்ற விவாதங்கள் அங்கு காண படுவதில்லை. இது அன்னா ஹசாறேவை ஆதரித்த மனநிலையை தான் காட்டுகிறது. உண்மையில் அமேரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் அங்குள்ள நம் தமிழ் உறவுகளுக்கு எதிரான ஒன்று. மேலும் அது ராஜபக்சேவை தப்பிக்க வைக்கும் வேலையையும் செய்கிறது.

அது சொல்வது என்னவென்றால் இலங்கையால் உருவாக்க பட்ட விசாரணைக் குழுவான "LLRC" சொல்வதை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்கிறது. இந்த LLRC இலங்கையில் போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்கிறது. இதன் மூலம் அமெர்க்கா கொலைகார ராஜபக்சேவை காப்பாற்றும் வேலையை தான் செய்கிறது.

அதே சமயம் ஐ.நா அமைத்த குழு அளித்த அறிக்கையில் ஓரளவுக்கு நேர்மை இருக்கிறது. அதாவது இந்த போர்க் குற்றங்களை கண்டுகொள்ளாத ஐ.நா வையே அது குறை கூறுகிறது. ஆனால் அந்த விசாரணைக் குழு அறிக்கையை அமேரிக்கா கிஞ்ச்சிதமும் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையும் சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதாக இல்லை. அதன் மூலம் இலங்கையை அது தப்பிக்க வைக்கும் வேலையை தான் செய்கிறது.

இப்படி நாம் புரிந்து கொண்டு போராட வேண்டிய பல விடயங்களை பற்றி தெரிந்து கொல்ல கூட இந்த டுவிட்டரும் பேஸ்புக்கும் விடுவதில்லை. 140 எழுத்துகளில் நம் உணர்ச்சிகள் முடக்கப் படுகின்றன. தீர்மானம் என்ன என ஆராயாமல், விவாதிக்காமல், ஏன் அதில் என்ன இருக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ள நாம் முயற்சிப்பதில்லை. வெறுமனே உணர்ச்சிபெருக்கை கொட்டி விட்டு அடுத்த வேலைக்கு போய் விடுகிறோம்.

சரி இங்கு பலருக்கு இதை தாண்டி என்ன செய்ய முடியும்? என்ற எண்ணம் வருகிறது. இது அடிப்படையில் அவர்களின் போராட்ட குணங்கள் மழுங்கி போயிருப்பதை தான் காட்டுகிறது. முதலில் பிரச்சினை என்ன? அதன் மூலம் என்ன? அது சரியா? தவறா? என்ற விவாதங்களை நடத்த இது போன்ற சமூக வலைத் தளங்களை பயன் படுத்துங்கள்.

அது குறித்த ஆய்வின் மூலம் ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் விடயங்களை போது மக்களிடம் நேரிடையாக சென்று பிரச்சாரம் செய்யுங்கள். பிரச்சாரம் என்றால் அரசியல் பிரச்சாரம் இல்லை. உங்கள் அருகாமை பகுதியில் உள்ள உழைக்கும் மக்களை சந்தித்து பேசுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள். நாளை ஒரு போராட்டம் என்றால் அங்கு நின்று போராடும் துணிவு அவர்களுக்கு தான் அதிகம். நம் டுவிட்டர்களுக்கு அல்ல.

உண்மையில் நீங்கள் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் எனில் இது தான் உங்களின் உணர்ச்சிகளை மக்களிடம் சேர்க்கும் வழிமுறை. ஈழப் போர் 60 ஆண்டுகால போராட்டம். அதில் கிடைக்காத நீதியை நாம் ஐந்து நாள் டுவிட்டுவதால் கிடைத்து விடும் என நினைத்தால் நாம் முட்டாள்களே!

சமூக வலைத் தளங்களை ஆக்க பூர்வமான முறையில் பயன் படுத்துவோம். தொடர்ந்து தொடர்பில் இருங்கள் தோழர்களே!

நன்றி,
வில்லங்கம்.

Sunday 25 December 2011

மே பதினேழு இயக்கமும் முல்லைப் பெரியாரும்!

மே பதினேழு இயக்கம் சென்னை மெரினாவில் நடத்திய கூட்டத்திற்கு சென்றிருந்தேன். ஏதோ ஆக்கப் பூர்வமாக செய்வார்கள் என நினைத்து சென்றேன். ஆனால் உண்மை வேறாக இருந்தது.


முதலில் அங்கு பேசப் பட வேண்டிய பிரச்சினையான "முல்லைப் பெரியாரைக்" காட்டிலும் அதிகம் பேசப் பட்டதுபாடப் பட்டது ஈழப் பிரச்சினைக் குறித்தும்பிரபாகரன் குறித்துமே. அப்போது  தானே கைத் தட்டல் வாங்க முடியும்.

இந்த மே பதினேழு இயக்கத்தின் நோக்கம் என்ன என்பது இதுவரை குழப்பமாகவே இருக்கிறது. அவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் ஐ.டி துறை மற்றும் அந்நியன் படத்தை ரசிக்கும் இளைஞர்கள் மட்டுமே.

பாடலாசிரியர் தாமரை:

கூட்டத்தில் பேசிய கவிதாயினி தாமரை கூறுகையில் இது ஜாதிமத சார்பற்ற கூட்டம் என்றார். உண்மைதான் ஆனால் வர்க்கம் சார் கூட்டம் என்பதை அவர் உணரவில்லையா?

இது விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வியல் சிக்கல் என்பது மக்களுக்கே புரிந்து தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அது தான் உண்மையான போராட்டம். அதை துவக்கியவர்  மக்களை தூண்டியவர் வை.கோ என்பதாக புகழாரம் பாடினார். இவர்கள் அடித்தட்டு மக்களிடம் இப்பிரச்சினைக் குறித்து எடுத்து செல்ல வில்லை. அதனால் அவர்களின் பங்களிப்பு இங்கில்லை. இது  படித்தவனால்எஞ்சிநியர்களால் மட்டும் தான் சாதிக்க முடியும்மற்றவர்களுக்கு இது புரியாதுதாங்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும் என்ற மமதையாகத் தோன்றுகிறது.

மேலும் தாமரை பேசுகையில் இந்தியன் என்ற உணர்வு நமக்கு வேண்டாம்நாம் தமிழர்கள் என சொல்வது தான் பெருமை. மலையாளிகள் நம்மை ஏளனமாக நினைப்பதாக பேசினார். மேலும்  தமிழனைத் தவிற அனைவரும் தங்கள் மாநிலம் தனி நாடு என்பதாக இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் இந்தியா என சொல்லிக் கொள்வதில்லை என்பதாக பேசி நாமும் அப்படித்தான் இருக்க  வேண்டும் என்றார்.

இங்கு தாமரைக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது. இனி மலையாளிகளின்  படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என சொல்லும் தைரியம் இருக்கிறதாஉதாரணத்திற்கு கவுதம் மேனனின்  ஆஸ்தான பாடலாசிரியரான இவரால் இனி கவுதம் மேனன் படத்திற்கு பாடல் எழுதாமல் இருக்க முடியுமா?


வை.கோ:

கூட்டத்தின் துவக்கத்தில் மீடியாக் காரர்களுக்கும் அங்குக் கூடியிருந்த மக்களுக்கும் வாக்கு வாதம் துவங்கியது. மறைக்காமல் ஓரம் போக சொல்லி பலர் கூச்சளிட்டும் சிலர் பேப்பரை சுருட்டி  அவர்கள் மீதும் அடித்தனர். இதில் மீடியாக்கள் கோபித்துக் கொண்டு செல்லஅவர்களை வை.கோ காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானப் படுத்திநீங்கள் தான் இந்தியாவின் தூண்கள் என  அந்த பிக்காளி ஊடகங்களிடம் கெஞ்சிக் கூத்தாடினார். பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

பின்னர் கூட்டத்தின் முடிவில் பேசிய வை.கோமுல்லைப் பெரியாறு உடையாது ஆனால் இந்தியா உடையும் தமிழகம் தனியாகப் பிரியும் என்றார். மேலும் ஏசு கிறிஸ்து ஒரு மிகப் பெரிய போராளி  என துதி பாடினர்.

ஏசு கிறிஸ்துவைப் போராளி என சொன்னால் இவரின் போராட்ட குணம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது நான் சொல்லத் தேவையில்லை. தமிழகம் தனியாகப் பிரிந்தால் இவர்கள் கொள்ளை  வேண்டுமானால் அடிக்கலாம். வேறொன்றும் செய்ய இயலாது.

பாரதிராஜா:

கூட்டத்தில் ஓரளவுக்கு சரியாகப் பேசியவர் என்றால் அது பாரதிராஜாவைத் தான் சொல்ல முடியும். மனதில் பட்டதை பளிச்செனப் பேசினார்.

காரணம் அவர் பேசுகையில்முன்னர் இது போன்று ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது வந்தக் கூட்டத்தைப் பார்த்து பெரிதும் நம்பியதாகவும்ஆனால் கூட்டம் முடிந்த பின்னர் அவரவர்  வேலையைப் பார்க்கப் போய் விட்டதாகவும் கூறிஅது போலில்லாமல் நன்கு சிந்தித்து களப் போராளிகளாக இருக்க வேண்டும் என்றார்.

மலையாளிகளுக்கு எதிராக கடும் காட்டததுடன் பேசிய இந்த பாரதிராஜாவின் அடுத்த பட நாயகி "இனியா" ஒரு மலையாளி. அதற்காக அவரை படத்திலிருந்து நீக்க முடியுமாஇவர்களுக்கு  கொள்கை வேறுதொழில் வேறு.

பாரதிராஜா உட்பட கூட்டத்தில் பேசிய அனைவரும் பேசுகையில் திருமாவளவனையும்வை.கோ-வையும் தலையில் தூக்கி வைத்துப் பேசினர். மேலும் வார்த்தைக்கு வார்த்தை பிரபாகரன் குறித்து  பேசினர்.

திருமுருகன்:

இனித் தமிழனுக்கு எங்கு பிரச்சினை வந்தாலும் நாமெல்லாம் மெரினாவில் கூட வேண்டும். கூடுவோமாஎன உரக்கக் கத்த கூட்டத்தில் இருந்தவர்களும் எதற்கு என தெரியாமலே கூடுவோம்  என்றனர்.

அதாவது எந்தப் பிரச்சினை எங்கு நடந்தாலும் நாம் மெரினாவில் கூடிக் கலைவோம். போராட்டக் களத்திற்கு போக வேண்டாம். பாது காப்பாக இருக்கலாம் என்பது போல் இருந்தது.

மேலும் அவரிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியதுதமிழகத்தில் பால்பேருந்து கட்டணங்களை உயர்த்திய பாசிச ஜெயாவுக்கு எதிராக ஏன் நீங்கள் மக்களை ஒருங்கிணைத்து போராடவில்லை?  ஒருவேளை அதில் தமிழர்கள் பாதிக்கப் படவில்லையோ?

இல்லை அப்படி செய்தால் கம்பி எண்ண நேரிடும் என்ற அச்சமோ?

ஒரு மக்கள் அமைப்பு என்பது மக்களுக்கான கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அந்த அமைப்பில் இணைபவர்களுக்கு அவை பயிற்றுவிக்கப் பட வேண்டும். வர்க்கங்களின்  அடிப்படையில் மக்களை மக்களின் பிரச்சினைகளுக்காக அணி திரட்ட வேண்டும். அதை விடுத்து ஒரு பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் பிரபலங்களை சேர்த்துக் கொண்டு இயங்கினால் அது  நிச்சயம் மக்களுக்காக ஒன்றும் செய்து விட முடியாது. பிரபலங்களுக்காக நடத்தப் பட்ட கூட்டம் போல் ஆகி விடும்.

மேலும் அது எதிர் காலத்தில் மக்களுக்கு எதிரான போலிக் கட்சி மற்றும் போலி அமைப்புகளின் வரிசையில் சேரக் கூடும். இந்த மே பதினேழு இயக்கமும் அதை நோக்கித்தான் செல்கிறது.