Sunday 25 December 2011

மே பதினேழு இயக்கமும் முல்லைப் பெரியாரும்!

மே பதினேழு இயக்கம் சென்னை மெரினாவில் நடத்திய கூட்டத்திற்கு சென்றிருந்தேன். ஏதோ ஆக்கப் பூர்வமாக செய்வார்கள் என நினைத்து சென்றேன். ஆனால் உண்மை வேறாக இருந்தது.


முதலில் அங்கு பேசப் பட வேண்டிய பிரச்சினையான "முல்லைப் பெரியாரைக்" காட்டிலும் அதிகம் பேசப் பட்டதுபாடப் பட்டது ஈழப் பிரச்சினைக் குறித்தும்பிரபாகரன் குறித்துமே. அப்போது  தானே கைத் தட்டல் வாங்க முடியும்.

இந்த மே பதினேழு இயக்கத்தின் நோக்கம் என்ன என்பது இதுவரை குழப்பமாகவே இருக்கிறது. அவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் ஐ.டி துறை மற்றும் அந்நியன் படத்தை ரசிக்கும் இளைஞர்கள் மட்டுமே.

பாடலாசிரியர் தாமரை:

கூட்டத்தில் பேசிய கவிதாயினி தாமரை கூறுகையில் இது ஜாதிமத சார்பற்ற கூட்டம் என்றார். உண்மைதான் ஆனால் வர்க்கம் சார் கூட்டம் என்பதை அவர் உணரவில்லையா?

இது விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வியல் சிக்கல் என்பது மக்களுக்கே புரிந்து தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அது தான் உண்மையான போராட்டம். அதை துவக்கியவர்  மக்களை தூண்டியவர் வை.கோ என்பதாக புகழாரம் பாடினார். இவர்கள் அடித்தட்டு மக்களிடம் இப்பிரச்சினைக் குறித்து எடுத்து செல்ல வில்லை. அதனால் அவர்களின் பங்களிப்பு இங்கில்லை. இது  படித்தவனால்எஞ்சிநியர்களால் மட்டும் தான் சாதிக்க முடியும்மற்றவர்களுக்கு இது புரியாதுதாங்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும் என்ற மமதையாகத் தோன்றுகிறது.

மேலும் தாமரை பேசுகையில் இந்தியன் என்ற உணர்வு நமக்கு வேண்டாம்நாம் தமிழர்கள் என சொல்வது தான் பெருமை. மலையாளிகள் நம்மை ஏளனமாக நினைப்பதாக பேசினார். மேலும்  தமிழனைத் தவிற அனைவரும் தங்கள் மாநிலம் தனி நாடு என்பதாக இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் இந்தியா என சொல்லிக் கொள்வதில்லை என்பதாக பேசி நாமும் அப்படித்தான் இருக்க  வேண்டும் என்றார்.

இங்கு தாமரைக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது. இனி மலையாளிகளின்  படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என சொல்லும் தைரியம் இருக்கிறதாஉதாரணத்திற்கு கவுதம் மேனனின்  ஆஸ்தான பாடலாசிரியரான இவரால் இனி கவுதம் மேனன் படத்திற்கு பாடல் எழுதாமல் இருக்க முடியுமா?


வை.கோ:

கூட்டத்தின் துவக்கத்தில் மீடியாக் காரர்களுக்கும் அங்குக் கூடியிருந்த மக்களுக்கும் வாக்கு வாதம் துவங்கியது. மறைக்காமல் ஓரம் போக சொல்லி பலர் கூச்சளிட்டும் சிலர் பேப்பரை சுருட்டி  அவர்கள் மீதும் அடித்தனர். இதில் மீடியாக்கள் கோபித்துக் கொண்டு செல்லஅவர்களை வை.கோ காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானப் படுத்திநீங்கள் தான் இந்தியாவின் தூண்கள் என  அந்த பிக்காளி ஊடகங்களிடம் கெஞ்சிக் கூத்தாடினார். பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

பின்னர் கூட்டத்தின் முடிவில் பேசிய வை.கோமுல்லைப் பெரியாறு உடையாது ஆனால் இந்தியா உடையும் தமிழகம் தனியாகப் பிரியும் என்றார். மேலும் ஏசு கிறிஸ்து ஒரு மிகப் பெரிய போராளி  என துதி பாடினர்.

ஏசு கிறிஸ்துவைப் போராளி என சொன்னால் இவரின் போராட்ட குணம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது நான் சொல்லத் தேவையில்லை. தமிழகம் தனியாகப் பிரிந்தால் இவர்கள் கொள்ளை  வேண்டுமானால் அடிக்கலாம். வேறொன்றும் செய்ய இயலாது.

பாரதிராஜா:

கூட்டத்தில் ஓரளவுக்கு சரியாகப் பேசியவர் என்றால் அது பாரதிராஜாவைத் தான் சொல்ல முடியும். மனதில் பட்டதை பளிச்செனப் பேசினார்.

காரணம் அவர் பேசுகையில்முன்னர் இது போன்று ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது வந்தக் கூட்டத்தைப் பார்த்து பெரிதும் நம்பியதாகவும்ஆனால் கூட்டம் முடிந்த பின்னர் அவரவர்  வேலையைப் பார்க்கப் போய் விட்டதாகவும் கூறிஅது போலில்லாமல் நன்கு சிந்தித்து களப் போராளிகளாக இருக்க வேண்டும் என்றார்.

மலையாளிகளுக்கு எதிராக கடும் காட்டததுடன் பேசிய இந்த பாரதிராஜாவின் அடுத்த பட நாயகி "இனியா" ஒரு மலையாளி. அதற்காக அவரை படத்திலிருந்து நீக்க முடியுமாஇவர்களுக்கு  கொள்கை வேறுதொழில் வேறு.

பாரதிராஜா உட்பட கூட்டத்தில் பேசிய அனைவரும் பேசுகையில் திருமாவளவனையும்வை.கோ-வையும் தலையில் தூக்கி வைத்துப் பேசினர். மேலும் வார்த்தைக்கு வார்த்தை பிரபாகரன் குறித்து  பேசினர்.

திருமுருகன்:

இனித் தமிழனுக்கு எங்கு பிரச்சினை வந்தாலும் நாமெல்லாம் மெரினாவில் கூட வேண்டும். கூடுவோமாஎன உரக்கக் கத்த கூட்டத்தில் இருந்தவர்களும் எதற்கு என தெரியாமலே கூடுவோம்  என்றனர்.

அதாவது எந்தப் பிரச்சினை எங்கு நடந்தாலும் நாம் மெரினாவில் கூடிக் கலைவோம். போராட்டக் களத்திற்கு போக வேண்டாம். பாது காப்பாக இருக்கலாம் என்பது போல் இருந்தது.

மேலும் அவரிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியதுதமிழகத்தில் பால்பேருந்து கட்டணங்களை உயர்த்திய பாசிச ஜெயாவுக்கு எதிராக ஏன் நீங்கள் மக்களை ஒருங்கிணைத்து போராடவில்லை?  ஒருவேளை அதில் தமிழர்கள் பாதிக்கப் படவில்லையோ?

இல்லை அப்படி செய்தால் கம்பி எண்ண நேரிடும் என்ற அச்சமோ?

ஒரு மக்கள் அமைப்பு என்பது மக்களுக்கான கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அந்த அமைப்பில் இணைபவர்களுக்கு அவை பயிற்றுவிக்கப் பட வேண்டும். வர்க்கங்களின்  அடிப்படையில் மக்களை மக்களின் பிரச்சினைகளுக்காக அணி திரட்ட வேண்டும். அதை விடுத்து ஒரு பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் பிரபலங்களை சேர்த்துக் கொண்டு இயங்கினால் அது  நிச்சயம் மக்களுக்காக ஒன்றும் செய்து விட முடியாது. பிரபலங்களுக்காக நடத்தப் பட்ட கூட்டம் போல் ஆகி விடும்.

மேலும் அது எதிர் காலத்தில் மக்களுக்கு எதிரான போலிக் கட்சி மற்றும் போலி அமைப்புகளின் வரிசையில் சேரக் கூடும். இந்த மே பதினேழு இயக்கமும் அதை நோக்கித்தான் செல்கிறது.

22 comments:

 1. unkal blog peyarukkum unkal karuththukkum sambanthameyillai.

  ReplyDelete
 2. nerru nadanthathu puratchi ena neengal ninaithaal ungkalukum puratchikum sambandame illai.

  ReplyDelete
 3. மிகவும் அரைவேக்காட்டுத்தனமான கட்டுரை இந்த புரட்சி பாதையின் கட்டுரை. சுரணையுள்ளவர்கள் இங்கு காரி உமிழுங்கள்...

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ethaavathu vimarsanam seyyanumnu seyringa pola..... ungakitta niraya puratchi paathai irukkunaa neengale munneduthi sellalaam yaarum ungalai thadukka villai......

  ReplyDelete
 6. நீங்கள் விமர்ச்சிக்கும் கருத்து சிலவை ஏற்புடையாதக இருந்தாலும்....இவ் விமர்சனம் தேவையா எனத் தோன்றுகிறது..மேலும் அவர்கள் ஏதோ செயல்படுகிறார்கள்...விடுங்களேன்...செயல் அது ஒன்றே மிகச் சிற்ந்த சொல்..வெறும் விமர்ச்னம் செய்வதாலேயே புரட்சியாளராகி விட முடியாது

  ReplyDelete
 7. மே 17 இயக்கம்
  மே 17 இயக்கம் ,,,
  தோல் கொடுத்து
  நிற்கும் தோழர் கூட்டம்
  இது
  ,,,தலைவர்
  பதவி கிடையாது
  தொண்டன்
  பதவி கிடையாது
  நிதி அமைசர்
  பதவி கிடையாது
  செயலளார்
  பதவி கிடையாது
  கோட்டர்குக்கும்
  பிரியாணிக்கும்
  அலையும் கூட்டம்
  நாங்கள் அல்ல
  பட்ட படிப்பு
  படித்து ,,,
  பல பணிகளில்
  பணிபுரியும்
  நல்ல நிலையில் இருக்கும்
  நாகரிகம் வர்க்கம் நாங்கள்
  நாவு பேசும் என்பதனால்
  எது வேணாலும்
  பேச வேண்டாம்
  நாங்கள் செல்லும் பாதை
  வீரமானது
  விவேகமானது
  இன்றைய நிலையில்
  விஞ்சானம் வளர்ந்து
  வானை சிருதாக்கி
  வையத்தை சுருக்கி
  அற்புதம் பல உண்டாகிருக்கும் காலத்தில்
  அந்த வேகத்திற்கு
  ஈடு கொடுத்து விவேகத்துடன்
  ஓட வேண்டிஉள்ளது
  அதன் தன்மை உங்களுக்கு
  அதிகபடியாக தெரிகிறது
  முன் காலத்தில் அமைதி இருந்தது
  அதனால் மிதமாக செயல் பட்டீர்கள்
  இன்றைய கால கட்டம் அதி வேக மிக்கது
  இன்றைய இலஞ்சர்களின்
  எழுச்சிக்கு தடை கல்லாக நிற்காதிர்கள்
  படிக்கல்லாக இருந்து பாதை

  ReplyDelete
 8. புரட்சி பாதை அவர்களே , காதில் ஈரமாக ஏதாவது வருகிறதா என்று பார்க்கவும். ஒரு வேளை மூளை நிறைந்து காது வழியாக சிந்தும் வாய்ப்பு இருக்கிறது.

  ReplyDelete
 9. தோழர் உங்களுடைய சில கருத்துக்கள் ஏற்புடையது என்றாலும் சென்னையில் முல்லை பெரியாருக்காக இன்று வரை மக்கள் கூட்டத்தை பெருமளவில் திரட்டி யாரும் போராடவில்லையே .

  45 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னையில், மிக பெரிய அரசியல் கட்சிகளின் தலைமைகள் உள்ள இடத்தில்,பெரியாறு அணைக்காக யாரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில்,மே 17 என்ற சிறு இயக்கம் தங்கள் அமைப்பை சேர்ந்தவர் களுக்கு முக்கியத்துவம் கொடாமல், போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல் பட்டதை நாம் குறை சொல்வது சரி அல்ல.

  அடுத்து தகவல் தொழில் நுட்ப இளைஞர்கள், திரைப்படம் பார்பவர்கள், கேளிக்கை விடுதி செல்பவர்கள் மட்டுமல்ல. எங்களுக்கும்,சமூக அக்கறை உண்டு என்று நிருபித்தவர்கள் மே 17 மற்றும் சேவ் தமிழ் அமைப்பினர்.

  இந்த போராட்டத்திற்கான செலவின் பெரும் பகுதியை தாங்கள் சுயமாக ஈட்டிய பணத்தை கொண்டுதான் அவர்கள் ஈடு கட்டுகிறார்கள் என்று கருதுகிறேன்.தங்கள் பொருளாதாரத்தை மக்கள் பணிக்காக செலவழிப்பவர்களை குற்றம் சொல்வது சரியல்ல,குறை இருந்தால் சுட்டி காட்டி, இப்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறலாம்.

  கட்டுரையாளர் இது போன்ற போராட்டத்தை நடத்தினால் அவருக்கு புரியும்.ஒருங்கிணைப்பு என்பது எவ்வவளவு கடினமான செயல், அதைவிட கடினமான செயல் பணத்தை திரட்டுவது, அதுவும் தமிழ் இனம் சார்ந்த சிக்கலுக்கு திரட்டுவது என்பது நமது தன்மானத்தை விட்டு பிச்சை எடுப்பது போன்றது.

  அவ்வளவு அவமானகளையும் சந்திக்க துணிவிருப் பவர்கள் மட்டுமே தமிழ் இனத்திற்காக போராட முடியும். இது தமிழ் இனம் சார்ந்த இயக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்

  கட்டுரையாளரின் ஆற்றாமை புரிகிறது .இதை விட இப்படி செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்லலாம்.செயலை இழிவு படுத்துவது அவருடைய காழ்புணர்வை காட்டுவதாகவே தெரிகிறது

  நாங்கள் தமிழர்கள்
  (தமிழர் விழிப்புணர்வு இயக்கம்)

  ReplyDelete
 10. இது ஒரு வெட்டி புரட்சி பாதை.. நண்பர்கள் வேலையை கவனிக்கவும், புரட்சியாளர்கள் யாரும் முகத்தை மறைத்து கொண்டு வேலை செய்ய மாட்டார்கள் களத்தில் நின்று யாரையும் கண்டு பயமில்லாமல் என் முகம் காவல் துறைக்கு தெரிந்துவிடுமோ என்று பயப்படாமல் நிற்பார்கள். இந்த விமர்சனத்தை வைத்த நண்பர் நேரிடையாக வந்து அவருடைய கருத்துகளை பகிரலாம் பதில் கிடைக்கும்..முகத்தை மூடிக்கொண்டு கேட்டால் பதில் தரவேண்டிய அவசியம் இல்லை. நேரிடையாக வருவார் என்றால் பதில் தர தயார்.. அனைவருக்கும் முன்பாக பொதுமக்களை வைத்துக்கொண்டு பதில் தர தயார்..

  ReplyDelete
 11. முகமூடிகளால் மலம் கழித்து வைப்பதற்காகவே திடீரென்று கட்டப்பட்ட கழிப்பறைதான் இந்த வலைத்தளம்.

  ReplyDelete
 12. Blog yeluthura tha thavira yenna puratchiya panni kilichinga sir? Nee oru vetti mundam veena pona thandam nu peru podama blog yeluthum pothey theriyuthu, Neathu rathiri Quarter adichitu.. mappu kurayama yenda mandaya pootu pichikura. Va da vanthu nerula pesuda parpom

  ReplyDelete
 13. மிகவும் அரைவேக்காட்டுத்தனமான கட்டுரை இந்த புரட்சி பாதையின் கட்டுரை. சுரணையுள்ளவர்கள் இங்கு காரி உமிழுங்கள்..

  ReplyDelete
 14. இங்கு காரி உமிழ்ந்த தோழர்களுக்கு, இப்படி விமரிசனங்கள் வரும் போது அதை ஏற்று திருத்த வேண்டியவற்றை திருத்திக் கொள்வதுதான் ஒரு மக்கள் அமைப்பின் உன்னதம். மே பதினேழு இயக்கம் சீரழிந்து விடக் கூடாது என்பதற்காக எழுதியது இது.

  இங்கு காரி உமிழாமல் கருத்தோடு விமரிசனம் செய்து தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்வதே சிறந்தது.

  ReplyDelete
 15. மேலும் சில தோழர்கள் சொல்லியிருந்தீர்கள், நியாயம் இருப்பதாகத் தோன்றினாலும் இங்கு ஏன் விமரிசனம் செய்ய வேண்டும் என.

  நிச்சயம் தேவை தோழர். அப்படி இல்லை எனில் இவர்களும் குப்பைக் காட்சிகளாகி விடுவர்.

  ReplyDelete
 16. வணக்கம் தோழரே :-
  மே 17 இயக்கம் மக்களிடம் முல்லை பெரியாறு பிரச்சனை பற்றிய விழுப்புனர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல் பட்டதை நீங்கள் குறை சொல்வது சரி அல்ல...

  ஐ.டி துறை -சேவ் தமிழ் இயக்கத்தினர் ,சமூக அக்கறை உண்டு என்று நிருபித்தவர்கள்.....
  நீங்கள் விமர்ச்சிக்கும் கருத்து சிலவை ஏற்புடையாதாக (பால், பேருந்து கட்டணங்களை உயர்த்திய பாசிச ஜெயாவுக்கு எதிராக ஏன் நீங்கள் மக்களை ஒருங்கிணைத்து போராடவில்லை?)இருந்தாலும் ...
  தன் குடும்பம்,தன் வாழ்க்கை என்ற வாழ்கிற...இந்த காலத்தில் சமூக அக்கறை கொண்டு பொது வாழ்க்கைக்கு வருகிற தோழர்களை விமர்சனம் செய்யாதீர்கள்...
  மும்பையில் இருக்கிற எனக்கு அவர்கள் மக்களிடம் எடுத்த செல்கிற பிரச்சாரம் பற்றி நன்றாகவே தெரியும், மிக அருமையாகவை செயல்படுகிறனர்...சென்னையில் இருந்து கொண்டு ஆரோக்கிய அற்ற விமர்சனம் தேவையில்லை. தோழர்...
  தோழர் புரட்சி பாதை...நீங்கள் எந்த மாதிரி போராட்டத்தை நடத்தி இருக்கிறீர்கள்..
  .ஈழ போர் நடந்த (2009)தில் தமிழகத்தில் இருக்கிற எந்த கட்சியும், சில அமைப்பும்...இந்த வகையிலும் மக்களிடம் எடுத்த செல்லவில்லை....
  வெறும் வெத்து போரட்டகளை... மக்களிடம் எதிரி யாரு என்பது தெரியவில்லை....மத்திய காங்கிரஸ் அரசா அல்லது சிங்கள அரசா...?சரியாக செயல்ப்படாத காரணத்தினால் கல்லூரி காலம் முடிந்து வேலைக்கு செல்கிற நேரத்தில் நாங்கள் மே 17 , சேவ் தமிழ், விழித்தெழு இயக்கம் என்ன பல அமைப்புகளாக உருவானோம்..நாங்களும் செயல்படவில்லை என்றால் பல புதிய அமைப்புகள் வரும்..

  இன்றும் கூட தமிழகத்திலும்,என் மும்பையிலும் கூட...நமக்கு போராட்ட வடிவம் என்ன என்பது தெரியாது...தெரிந்து இருந்தால் செங்கொடி தங்கையே இழந்து இருக்க மாட்டோம்(நாங்கள் சில ஆரோக்கியமான போராட்டத்தை செய்து இருக்கிறோம்)...
  எந்த மாதிரி போராட்டத்தை செய்ய வேண்டும் தோழரே சொல்லுங்கள்.....

  (எனக்கான (சாதி,மதம் இல்லாமல்)நாடு உருவாகும் வரை நானும் அகதியே.....)

  சிறீதர்
  விழித்தெழு இயக்கம்
  மும்பை .

  ReplyDelete
 17. தோழர் ஸ்ரீதர்,

  அது நிச்சயம் ஒரு விழிப்புணர்வு கூட்டம் என சொல்ல முடியவில்லை. அத்தான் வருத்தமே. அங்கு முல்லை பெரியாறு குறித்த விழிப்புணர்வு குறித்து யாரும் பெரிதாக பேசவில்லை.

  நான் ஐ.டி துறையில் இருபவர்களுக்கு சமூக ஆர்வம இல்லை என சொல்லவில்லை. இருக்கிறது அனால் அது பெரும்பாலும் தவறான வழிகாட்டுதலால் மதிப்பிழந்து போகிறது.

  இங்கு இந்த இயக்கத்தால் மக்களிடம் பிரச்சாரம் என்பது கூட வர்க்கம் சார்புடையதாக இருக்கிறது. தனக்கென கொள்கைகள் வகுத்து ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நேரிடையாக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும். முக்கியமாக இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது போர்க்குணம் மிக்க அடித்தட்டு மக்களிடம் தான்.

  அவர்களை விடுத்து அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தி விட முடியாது. இதை செய்யாமல் பிரபலங்களை வைத்து மேடையை நிரப்பி செய்வது எந்த அளவில் வீரியமான போராட்டமாக இருக்க முடியும்?

  ReplyDelete
 18. அன்பு நண்பர் புரட்சிப் பாதை,

  மே17 இயக்கத்தினர், அவர்களுக்கு தெரிந்த வழியில் போராடுகிறார்கள். முடிந்தால் தாங்கள் உஙளுக்கு தெரிந்த வழியில் அடித்தட்டு மக்களை இணைத்து ஒரு போராட்டத்தினை நடத்திக் காட்டி விட்டு இந்த வலைப்ப்பூவில் மீண்டும் எழுதினீர்களானால், உங்களின் உணர்வு மதிக்கப் படும்.
  போகிற வழியில் குறை சொல்ல தாங்களாக உரிமை எடுத்துக் கொண்டதைப் போல இல்லாது, இந்த போராட்டத்தினை நடத்தி விட்டு இப்படி நடத்த வேண்டும் என எழுதினீர்கள் என்றால், உங்கள் உணர்வும் கருத்தும் மதிக்கப்படும்.

  சொல்லிய யார்க்கும் எளிது, அரியாவாம்
  சொல்லிய வண்ணம் செயல் - குறள்.

  ReplyDelete
 19. அன்னா ஹசாரே கூட அவருக்கு தெரிஞ்ச வழில போறாடுராறு. அதையும் தான் நான் விமர்சனம் பன்னிருக்கேன்.எல்லாருமே பண்றாங்க. அவங்கல்லாம் போராடிட்டு தான் பண்றாங்களா? போராட்ட முறை தவறாக இருந்தால் விமர்சனம் பண்ண எல்லாருக்கும் உரிமை உண்டு.

  ReplyDelete
 20. இந்த பெரியாரிஸ்டுகள் ராஜா கைதை தலித் என்று சாதி ரீதியாக ஊழலை திசை திருப்ப பார்த்தவர்கள். கனிமொழியை கொண்டாடுபவர்கள். தமிழர் பிரச்சனைகளில் மவுனமாக வேடிக்கை பார்க்கும் கருணாநிதிக்கு வாய்தா வாங்குபவர்கள். காங்கிரசுக்கு எதிராக குரல் கொடுக்க துணிவில்லாதவர்கள் அப்பப்போ மக்களுக்கு குரல் கொடுப்பவகளை இப்படி ஆராய்ந்து குற்றம் மட்டும் சொல்வார்கள்...

  ReplyDelete
 21. கட்டுரையைக் கருத்தால் மோதிக் கிழிக்காமல், ஒருமையில் பேசுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தமிழர் பண்பாடா? ஏன் எவராலும் கண்ணியமாக எதிர்க் கருத்தை எடுத்து வைகா முடியவில்லை? கட்டுரையாசிரியர் ஒரு முன் முடிவோடு போனமாதிரியே உள்ளது(went with a pre-conceived notion. ஒரேயடியாய் இந்த மே17 இயக்கத்தினர் ஆணியே புடுங்கவில்லை என்பது சற்று உறுத்துகிறது.வெறும் நையாண்டிப் பார்வையின்றி சற்று பொறுப்போடு இந்தக் கூட்டத்தை கவனித்திருந்தால் ஏதேனும் நல்ல விஷயம் கண்ணில் பட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான் கருத்து.

  ReplyDelete